குழந்தையை பிரசவித்த தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம் – வைத்தியர் எரிபொருள் வரிசையில்
குழந்தையை பிரசவித்த பின்னர் தாய்க்கு குருதிபெருக்கு ஏற்பட்டிருந்தது,மருத்துவர் எரிபொருளை பெறுவதற்கான வரிசையில் நின்றிருந்தார்,முச்சக்கரவண்டி கூட கிடைக்கவில்லை,எரிபொருள் வரிசையில் நின்ற மருத்துவரை கூட்டி வருவதற்காக வாகனங்களை அனுப்புவதற்கு பொலிஸார் முயன்றனர் இது இலங்கையின் கிராமமொன்றில் இடம்பெறவில்லை – நுகேகொடயில் இடம்பெற்றது யார் பொறுப்பு என மருத்துவர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.