யாழ்ப்பாணம் – கீரிமலையில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர் நடராசா (வயது -63) கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேதபரிசோதனையின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

5,000 ரூபாய் பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாட்டை அடுத்தே இந்தக் கொலை நடந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply