யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்று 22 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply