இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி அப்போது, வெற்றியை தன்வசப்படுத்தியது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடர், தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்றது.

இதன்படி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?
காமன்வெல்த் போட்டிகள் எங்கு எப்போது நடைபெறுகிறது?

இதில் முதல் போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன், ஏனைய மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை தன்வசப்படுத்தியது.

Share.
Leave A Reply