காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண்  கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயோதிப பெண்  அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படாத நிலையில் காணப்படுவதனால்,  கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வயது 78 வயதுடைய வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை  தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் வயோதிப பெண்  குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply