கால்நடை உணவு உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை நேரடியாக அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, கால்நடை உணவு உற்பத்திக்காக அரிசியை விற்பனை செய்தல் அல்லது சேமித்து வைப்பது மற்றும் கொண்டு செல்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்டத்தின் கீழ்  24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எந்தவொரு இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வர்த்தகர் அல்லது விநியோகஸ்தர் கால்நடை உணவு உற்பத்திக்காக அல்லது வேறு ஏதேனும் மூலப்பொருளுக்காகவோ நேரடியாக அரிசி அல்லது நெல்லை இறக்குமதி செய்வது, விற்பனை, விநியோகம் செய்வது அல்லது சேமித்து வைப்பது தடை செய்யப்படும்.

அதேவேளை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடரும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply