நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளால், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் நேற்று (27/06/2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதிலும் அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறியள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply