சீனாவின் நன்கொடையினால் கிடைக்கப்பெற்ற 5,000 மெற்றிக்தொன் அரிசி 9 மாகாணங்களிலும் உள்ள மாணவர்களின் போசனை உணவிற்காக வழங்கப்படும்.
நெருக்கடியான நிலைமையினை எதிர்கொண்டுள்ள போது சீனாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என பதில் கல்வி அமைச்சர் சீன அரசாங்கத்தின் பிரதிநிதியான இலங்கைக்கான சீன தூதுவரிடம் குறிப்பிட்டார்.
இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு போசனையான உணவினை வழங்க தீர்மானித்துள்ளோம்.
வழங்கப்பட்ட நன்கொடையினை சீனா கௌரவமாக கருதுகிறது என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
சீனா இலங்கை இறப்பர் – அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூரணமடைந்துள்ளதை முன்னிட்டு இலங்கைக்கு 10,000 மெற்றிக்தொன் அரிசியை நன்கொடையாக வழங்க சீனா தீர்மானித்தது.
அதற்கமைய முதற்கட்டமாக 5,000 மெற்றிக்தொன் அரிசி தொகையை இலங்கைக்கான சீன தூதுவர் கீ-சென்ஹொங் பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் நேற்று கையளித்தார்.
இதன்போது கருத்துரைத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளையில் சீனாவினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியில் காணப்படும் நல்லுறவு இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை மேலும் பலப்படுத்தியுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள 5,000 மெற்றிக்தொன் அரிசி 9 மாகாணங்களிலும் உள்ள 7,900 பாடசாலைகளில் கல்வி பயிலும் மில்லியன் கணக்கிலான மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக பயன்படுத்தப்படும். இலங்கை சார்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
சீன அரசாங்கம் சார்பில் கலந்துக்கொண்ட இலங்கைக்கான சீன தூதுவர் சி சென்ஹொங் இலங்கை நெருக்கடியான சூழலை எதிர்க்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டதற்கமைய பாடசாலை மாணவர்களின் போசனைக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும்.
அத்தியாவசியமான சந்தர்ப்பத்தின் போது வழங்கப்பட்ட நன்கொடையினை சீனா கௌரவமாக கருதுகிறது.மிகுதி 5,000 மெற்றிக்தொன் அரிசி விரைவாக வழங்கப்படும்.
இலங்கை சகோதரர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள். மொத்த சனத்தொகையில் பெரும்பாலான குடும்பத்தினர் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு போசனையான உணவினை வழங்க தீர்மானித்தோம். தற்போதைய நெருக்கடியான சூழலை இலங்கையர்கள் ஒன்றாக எதிர்கொண்டு விரைவாக முன்னேற்றமடைவார்கள் என்றார்.