எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
அளுத்கமயில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மீது லொறி மோதியுள்ளது.
இந்த விபத்தில் அளுத்கம தர்கா நகரை சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு முதல் தர்கா நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து விட்டு, இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு செல்ல புறப்பட்டுள்ளார்.
இதன்போது, மத்துகம நோக்கி பயணித்த லொறியில் மோதி அந்நபர் உயிரிழந்துள்ளார்.
லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.