திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தனது வீட்டின் சுவாமி அறையில் நேற்றுக் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கொள்கலனில் தீ பற்றிக்கொண்டமையே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம்  திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply