எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் 32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்துள்ளார்.
இதில், 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த தாயும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன