எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த போலீஸ் விசேட அதிரடிப்படையினர் (Special Task Force) ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
“அமைதியின்மையில் ஈடுபடுவோர் போலீஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, போலீஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், போலீஸாரின் கடமைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைபட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.