வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமைக்கு ஜேவிபியும் முன்னிலை சோசலிச கட்சியும் தங்கள் கண்டணங்களை வெளியிட்டுள்ளன.

22 ம் திகதி பாதுகாப்புசெயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்  பொலிஸ்மா அதிபர் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் கரும்புலிகள் தினத்தை நினைவுகூறும் வகையில் வடக்கில் அல்லது தெற்கில் குண்டுகளை வெடிக்கவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டை சுமத்துவதே இதன் நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் வெளிநாட்டு தூதரக பணியாளர்களையும் இந்த இரண்டு நாட்களும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவேண்டாம் எனஎச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்கள் குறித்த விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும்,அப்படி வெளிப்படுத்தாவிட்டால்  அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான முயற்சியே இது என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply