யாழில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழப்பு

யாழ். பொன்னாலை மேற்கு பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இன்று மதியம் குறித்த குழந்தையின் தாய் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை குழந்தை முற்றத்தில் இருந்த தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.

இதையடுத்து தாய் சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை தேடியவேளை குழந்தையை காணவில்லை.

இதன்போது தாயாரும் அயலில் உள்ளவர்களும் சேர்ந்து குழந்தையை தேடிய போது குழந்தை தண்ணீர் வாளியினுள் வீழ்ந்திருந்தது அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து குழந்தையை மீட்ட அயலில் உள்ளவர்கள் மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தள்ளனர்.

யசோதரன் யஸ்மிகா என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், குழந்தையின் சடலம் தற்போது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply