இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர பொலிஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அகதிகளாக வரும் பெரும்பாலானோர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைகளில் இறங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரையோர பொலிஸாருக்கு சொந்தமான படகுகள் தனுஷ்கோடியில் ரோந்து செல்லவும் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்கவும் தனுஷ்கோடி படகுகள் இறங்குதளத்தில் நிறுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது.