கடலூரில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவர்களாலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் சக மாணவனின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்பொழுது மாணவனும் மாணவியும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டிய சக மாணவர்கள் மூன்று பேர் அவரை தனியாக அழைத்துவந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்த தகவல் பிற மாணவர்களுக்கும் தெரிய வந்த நிலையில் மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்திய போலீசார், பிறந்தநாள் விழாவின் போது மாணவியுடன் இருந்த மாணவன், மேலும் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மூன்று மாணவர்கள் என மொத்தம் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply