திருச்சி: சிவரஞ்சனிக்கு போன் செய்தும் எடுக்காததால், அவரது தங்கை பதட்டத்துடன், வீட்டுக்கு வந்தார்.. கதவை திறந்துமே அவர் கண்ட காட்சியை கண்டு அலறிப்போய்விட்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி… மனைவி பெயர் வசந்தகுமாரி… இவர்களுடைய மகன் நரசிம்மராஜ்.. 37 வயதாகிறது.
இவரது மனைவி பெயர் சிவரஞ்சனி.. 28 வயதாகிறது.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 11 வருடங்களாகின்றன.. பிரதிக்ஷா, லக்ஷா என்று 10 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
நரசிம்மராஜ் ஆட்டோ டிரைவர் ஆவார்.. ஆனால், சவாரி சரியாக கிடைக்காமல், போதிய வருமானமும் கிடைக்காததால் சிரமப்பட்டு வந்துள்ளார்.
தம்பதி அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மராஜ் சமயபுரம் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டை விற்றார்.. அதில் வந்த பணத்தில், தனக்கிருந்த கடனை அடைத்தார்.. கொஞ்சம் பணத்தை சிவரஞ்சனி பெயரில் பேங்க்கில் போட்டு வைத்தார்..
மிச்சமுள்ள பணத்தை வைத்து, நெ.1 டோல்கேட் அருகே சாய்நகரில் ஒரு வாடகை வீட்டை பிடித்து குடும்பத்துடன் குடியேறினார்…
மேலும் புதிதாக தொழில் தொடங்குவதாக கூறி, ஒரு குறிப்பிட்ட தொகையை கையில் வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால், 3 மாதமாகியும் எங்கேயும் நரசிம்மராஜ் வேலைக்கு போகவில்லை.
சிவரஞ்சனி அதனால், தொழில் தொடங்க வைத்திருந்த பணம் குறித்து சிவரஞ்சனி கேட்டுள்ளார்..
அதற்கு அவர், பணத்தை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளதாக கூறினார்.. ஆனாலும், பணம் எதுவும் அங்கிருந்து வரவில்லை..
இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு வெடித்து வந்தது.. கடந்த 4-ந் தேதி சிவரஞ்சனியின் அக்கா சசிகலா, சிவரஞ்சனியையும், நரசிம்மராஜையும் தொடர்பு கொண்டபோது, இரண்டு பேரின் செல்போனும் ஸ்விட்ச்ஆப் ஆகியிருந்தது.
அதனால், சசிகலா, நேரிலேயே கிளம்பி சிவரஞ்சனி வீட்டிற்கு வந்தார். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்தது.
ஒருவேளை, குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என்று நினைத்து, சசிகலா திரும்பி சென்றுள்ளார்.
ஆனாலும், நேற்றுவரை அவர்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியே இருந்ததால் சந்தேகம் அதிகமாகி உள்ளது.
அதனால், விசாகப்பட்டினத்தில் உள்ள நரசிம்மராஜின் சகோதரிக்கு போன் செய்தார்.. அப்போது, சிவரஞ்சனியின் மகள் பிரதிக்ஷா போனை எடுத்து பேசினாள்… சிவரஞ்சனிக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொன்னாள்.
பெட்ரூம் இதனால் மேலும் சந்தேகமடைந்த சசிகலா, சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்…
அங்கு பெட்ரூமில் கட்டிலுக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் சிவரஞ்சனி பிணமாக கிடந்ததை கண்டு அலறினார்..
உடல் அழுகி கிடந்ததை பார்த்து சத்தம் போட்டார்… கொள்ளிடம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது..
போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர்.. தம்பதிக்குள் தகராறு நடந்ததால், கடந்த 3-ந் தேதி நள்ளிரவில், நரசிம்மராஜ், சிவரஞ்சனியை கத்தியால் குத்தி கொன்றுள்ளது தெரியிவந்தது.
கட்டிலுக்கு கீழே சிவரஞ்சனியின் நகைகளையும், வீட்டில் பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்துக்கொண்ட நரசிம்மராஜ், சிவரஞ்சனி உடம்பெல்லாம் மஞ்சள் பொடியை பூசிவிட்டு, ஒரு பிளாஸ்டிக் பையில் சடலத்தை கட்டிவிட்டு, அந்த சடலத்தை கட்டிலுக்கு கீழே சுருட்டி வைத்துவிட்டு, மகள்களையும், அம்மாவையும் அழைத்துக்கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்தது..
மகள்கள் இப்போதைக்கு ஆந்திராவில் இருக்கிறார்கள்.. ஆனால், நரசிம்மராஜும், அவரது அம்மாவும் எஸ்கேப் ஆகிவிட்டனர்..
அம்மாவும் தலைமறைவாக உள்ளதால், அவருக்கும் இந்த கொலையில் தொடர்பிருப்பதாக தெரிகிறது.. தாய் – மகன் இருவரையுமே போலீசார் தேடி வருகிறார்கள்.
கட்டிலுக்கு அடியில்.. கட்டிலுக்கு அடியில் சடலம் கிடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது..
முதலில், சசிகலா, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.. அப்போது சிவரஞ்சனியின் கால்கள் மட்டும் தெரிந்திருக்கிறது..
அதைப் பார்த்து அதிர்ந்துபோய், கதவை உடைத்து கொண்டுதான் உள்ளே போய் பார்த்துள்ளார்..
சிவரஞ்சனியின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன.. மஞ்சள் பொடி நெடி அதிகமாக வந்துள்ளது..
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் நரசிம்மராஜ் பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது..
இந்த விஷயம் தெரிந்துதான், சிவரஞ்சனி கண்டித்துள்ளார். அதனாலேயே கொலை செய்திருக்கக்கூடும் என போலீஸார் கருதுகின்றனர்.