எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் மட்டுமன்றி, எரிபொருள்களால் இயங்கக்கூடிய உபகரணங்களும் வரிசைக்கு எடுத்துவரப்பட்டன.
ஒரு சில வரிசைகளில் தங்களுடைய பிள்ளைகளின் விளையாட்டு கார்களையும் சிலர் நிறுத்திவைத்திருந்தனர். அந்தளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது.
மோட்டார் சைக்கிள்களின் எரிபொருள் தாங்கிகள் இரண்டு ஒரே நேரத்தில் எடுத்துவரப்பட்டிருந்தன.
ஜெனரேட்டர்கள் மற்றும் மரங்களை அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவையும் வரிசைக்கு எடுத்துவரப்பட்டிருந்தன.
இந்நிலையில், அடையாள இலக்கம் பொறிக்கப்பட்ட மாடொன்று, எரிபொருள் வரிசையில் நின்றிக்கும் படம் வைரலாகியுள்ளது.
தம்புள்ளையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனங்களுடன் மாடும் வரிசையில் நின்றிருந்தது.