ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணம், பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து 50ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் இந்த பணம் பல்கலைக்கழக மாணவர்களால் பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி ஒருவர் ஊடாக கோட்டை பொலிஸ் தலைமையகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.