இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு மூடை உரத்தினை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
556 விவசாய மத்திய நிலையங்களுக்கு 800 லொறிகள் மூலம் உர விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதற்கு தேவையான டீசல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
44 ,000 மெட்ரிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது.
குறித்த உரம், இந்திய உயர்ஸ்தானிகரால் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இன்று உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மேலும் 21,000 மெட்ரிக் தொன் யூரியாவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.