ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“நீங்கள் பதிவிட்ட டுவிட்டரே எனது வீடு தீக்கிரையாகக்  காரணம்” இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரவூப்  ஹக்கீமை கடுமையாகச்  சாடியுள்ளார்.

இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஆற்றிய உரையின் போதும் இதனை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சர்வகட்சி ஆட்சியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply