இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் உட்பட  15பேரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்துள்ளன என விமானப்படையின் உயர்மட்ட வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்களசேவைக்கு தெரிவித்துள்ளன.

9ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் திருகோணமலைகடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் அவர் திருகோணமலையிலிருந்து இரத்மலானை விமானநிலையத்திற்கு திங்கட்கிழமை இரண்டு பெல்412 ஹெலிக்கொப்டர்களில் சென்றார்.

அவர் முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு நேற்று மாலை சென்றார்.

நாட்டின் விமானபடையின் பிரதிநிதியொருவர் ராஜபக்சவும் அவரது குழுவினரும் ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் யுஎல் 225 விமானம் மூலம்  துபாய்க்கு செல்ல திட்டமிட்டிருந்தனர் என உறுதி செய்தார்.

ஆனால் ராஜபக்சவும் அவரது குடும்பத்தவர்கள் குழுவினர் அனைவரும் பண்டாரநாயக்க விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு தங்கள் ஆவணங்களை உறுதி செய்வதற்காக  வந்தனர் என்பதை குடிவரவு துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பொதுமக்களிற்கான பகுதிக்கு செல்வதை தடுக்கின்றனர் என பொலிஸாரும் விமானநிலைய பாதுகாப்பு ஊழியர்களும் இந்த ஊடகத்திற்கு தெரிவித்தனர்.

9ம் திகதி முதல் மிக முக்கிய பிரமுகர்களி;ற்கான  பகுதிகளில் பணியாற்றுவதற்கு குடிவரவுகுடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என எஸ்பிஎஸ் சிங்கள சேவைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன் பின்னர் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் எதிகாட் ஈவை267 விமானநிலையத்தில் ஏற முயன்றனர்,ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அதனை தவறவிட்டனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் ஏஎன்32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமானநிலையத்தில் இறங்குவதற்கு விடுத்தவேண்டுகோளை இந்தியா மறுத்துள்ளது என எங்கள் ஊடகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இரவில் தங்கியிருந்த ஜனாதிபதி எப்படி பாதுகாப்பாக வெளியேறுவது என ஆராய்ந்தனர் என பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவர் உறுதி செய்தார்.

அமெரிக்க விசா மறுப்பு

2019 தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்ட  கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவிற்கு செல்வதற்காக கடந்த வாரம் அமெரிக்க தூதகரத்திடம் விசாவை கோரியுள்ளார்,

ஆனால் அந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரஜாவுரிமையை துறந்த ஒருவருக்கு மிகவும் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளை தவிர விருந்தினர் விசாவைவழங்க முடியாது என தூதரகம் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியது என தூதரக வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்கள சேவைக்கு தெரிவித்தன.

அவருக்கு விசா வழங்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அவர் நாட்டின் தலைவராக விசா இன்றி செல்ல முடியும் என்பதை நினைவுபடுத்தினோம்ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் வேறுவிதமானவை என தூதரக பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

எனினும் புதிய கடவுச்சீட்டை பெறும் விடயத்தில் அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் இளைய சகோதரருக்கு உதவியது.

Share.
Leave A Reply