பொலிஸ் அதிகாரியை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ எங்களுக்கு கிடைத்துள்ளது.

குறித்த அதிகாரி பூஜாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

குறித்த அதிகாரி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, பின்னர் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று அவர்களது மோட்டார் சைக்கிள்களில் எரிபொருளை நிரப்பி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளதை அடுத்து பிரதேசவாசிகள் அதிகாரியை தாக்கியுள்ளனர்.

நேற்று பிற்பகல் அலதெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து அதிகாரி மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply