யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம், கந்தர்மட பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையின் ஊடாக கடக்க முற்பட்ட நபர் ஒருவர் மீது மோதியுள்ளது.
இதன்போது, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் யாழ்பபாணம் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரசா (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.