இலங்கையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவை சேர்ந்த 7 பேர் நேற்று (15) மாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்

வவுனியா – செட்டிக்குளத்தை சேர்ந்தவர்களே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதுடன், இவர்களில் 2 சிறுவர்களும் சிறுமியொருவரும் அடங்குகின்றனர்.

தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைக்கு சென்ற 7 பேரும் இராமேஸ்வரம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 116 அகதிகள் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply