நாட்டில் இன்று (17) இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளுது.
அந்த வகையில், ஒரு லீற்றருக்கான புதிய விலைகள் பின்வருமாறு
ஒக்டேன் 92 பெற்றோல் – 450 ரூபா
ஒக்டேன் 95 பெற்றோல் – 540 ரூபா
ஆட்டோ டீசல் – 440, ரூபா
சூப்பர் டீசல் – 510 ரூபா
அந்த வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோலை 20 ரூபாவாலும் டீசலை 20 ரூபாவாலும் குறைத்துள்ளது. அத்துடன் சுப்பர் டீசலை 10 ரூபாவாலும் ஒக்டெய்ன் 95 ரக பெற்றோலை 10 ரூபாவால் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு புதிய “எரிபொருள் பாஸ்” முறையின்படி ஜூலை 21 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இன்று (17) இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ நிறுவனத்தின் எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை குறைக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ஒரு லிட்டர் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு
ஒக்டேன் 92 – 450 ரூபா
ஒக்டேன் 95 – 540 ரூபா
ஒட்டோ டீசல் – 440, ரூபா
சூப்பர் டீசல் – 510 ரூபா
என்ற வகையில் தமது புதிய எரிபொருள் விலைப் பட்டியலை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டள்ளது.