வாகன இலக்கத் தட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எரிபொருள் வழங்கல், இறுதி இலக்கங்களுக்கு அமைய 0,1,2 – செவ்வாய் மற்றும் சனி, 3,4,5 – வியாழன் மற்றும் ஞாயிறு, 6,7,8,9 – திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் வழங்கப்பட்டகியூஆர் குறியீடு ஜூலை 21 முதல் ஜூலை 24 வரை கொழும்பில் சில இடங்களில் பரிசோதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இன்று மாலை 4.00 மணியளவில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டுக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் ஜூலை 25 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கியூஆர் முறைமை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply