ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவே இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை இராணுவத்தினர் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர்,
போராட்டகாரர்களை ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றியுள்ளனர்.