திங்கட்கிழமை முதல் (ஜூலை 25) அரச பாடசாலைகள் மற்றும் அனைத்து தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் பாடசாலை நாட்கள் மூன்றாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்கள் இணையவழி மூலம் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
அரச பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் (25)திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் போது மாணவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும்.
மேலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி மூலம் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்.
இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து பாடசாலை அதிபர்களுக்கு மற்றும் மேலதிகமாக மாகாணக் கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.