மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள மகிழடித்தீவு பிரதேசத்தில் காளிகோவில் ஆலமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (25) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

 

மகிழடித்தீவு பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குமாரசாமி திலகேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குடும்ப பிரச்சனை காரணமாக சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது  காப்பாற்றப்பட்டார்

இதனை தொடர்ந்து குறித் நபரின் மனைவி இன்று அதிகாலை ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல எழுந்து கணவரை தேடிய போது அவரை வீட்டில் இல்லாத நிலையில், அவர் அருகில் சென்றிருக்கலாம் என நினைத்து அவர் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் இன்று கால 8.30 மணிளவில் அந்த பகுதியிலுள்ள காளிகோவில் மூலஸ்தானப்பகுதியிலுள்ள ஆலைமரத்தில் தூக்கில் தொங்கி; தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply