கோடிகளை செலவு செய்து கடலில் விழுந்து விட்டதாக கணவன் தேடி கொண்டு இருக்க கள்ளக்காதலன் உடன் ஓட்டம் பிடித்தார் மனைவி பெங்களூரு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய் பிரியா 2(4). சாய் பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சீனிவாஸ் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என்று கணவனிடம் கூறிய சாய்பிரியா விசாகப்பட்டினத்திற்கு வந்தார்.

அவரை தொடர்ந்து சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். கடந்த திங்களன்று இரண்டு பேரும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு மாலை வேளையில் சென்று இருந்தனர்.

அப்போது சீனிவாசுக்கு அவருடைய நண்பரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. நண்பருடன் செல்போனில் பேசிய பின் தேடி பார்த்தபோது சாய்பிரியாவை காணவில்லை.

கடலில் தண்ணீருக்கு மிக அருகில் இரண்டு பேரும் இருந்தபோது சீனிவாசுக்கு செல்போன் அழைப்பு வந்தது, சாய்பிரியா காணாமல் போனது ஆகியவற்றின் காரணமாக அவர் கடலில் விழுந்து இருக்கலாம் என்று சீனிவாஸ் கருதினார்.

பல இடங்களில் தேடிப் பார்த்தும் சாய்பிரியாவை காணவில்லை. இது பற்றி சீனிவாஸ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விசாகப்பட்டினம் போலீசார் கடலோர காவல் படையினருக்கு தகவல் அளித்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து சாய்பிரியாவை ஹெலிகாப்டர் மூலமும் வேறு வகைகளிலும் இரண்டு நாட்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாய் பிரியா பெங்களூரில் பாதுகாப்பாக இருப்பதாகவும்.. தன்னை தேட வேண்டாம் என்றும் பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

தன் காதலன் ரவியுடன் தனது விருப்பத்தின் பேரில் வெளியேறியதாகச் கூறி உள்ளார். காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும் அவருடனேயே இருக்க முடிவு செய்து உள்ளதாகவும்.

தன்னை தேடி வரவேண்டும் பெற்றோரிடம் கூறி உள்ளார். கழுத்தில் தாலியுடன் இருக்கும் படத்தை அவர் தந்தைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

சாய்பிரியாவுக்கு அவர் திருமணத்திற்கு முன்னரே நெல்லூரை சேர்ந்த ரவி என்பவரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் கூட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.

கணவனுடன் வாழ பிடிக்காமல் திட்டம் போட்டு ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் வந்து அங்கிருந்து கணவனை ஏமாற்றி ரவியுடன் சேர்ந்து சாய்பிரியா நெல்லூருக்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.

 

Share.
Leave A Reply