மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி மொறக்கொட்டாஞ்சேனை விஷ்ணு ஆலையத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியால் நடந்து சென்ற இளைஞன் ஒருவர் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
நேற்று (31) இரவு 11 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சந்திவௌி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவடிவேம்பு 2 ம் பிரிவைச்சேர்ந்த 27 வயதுடைய வேணுகோபலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று இரவு 11 மணிக்கு வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞன் மீது மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.