வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம், இன்று (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 11ஆம் திகதியன்று, 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழாவும், 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை உற்சவமும் , 23ஆம் திகதி காலை மாம்பழத்திருவிழாவும் , 24ஆம் திகதி சப்பரமும் மறுநாள் 25ஆம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளன.