டெல்லி: நாய் ஒன்றை மலைப்பாம்பு சுற்றி நெறித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாயை பாம்பின் பிடியில் இருந்து நீக்க 3 சிறுவர்கள் போராடும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
முதல் நமது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் நாய்க்கு எப்போதும் தனி இடம் உண்டு.
வளர்ப்பவர்களை எஜமானர்கள் போலவே பாவிக்கும் நாய்கள், அந்நிய நபர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் விட்டு வைக்காது.
நன்றியுள்ள நாய்கள்
நன்றியுள்ள நாய்கள் பகல் வேளைகளில் யாரெனும் வீட்டுக்கு வந்தால் கூட குலைத்து ஊரை கூட்டிவிடும் நாய்கள், இரவில் முன்பின் தெரியாத நபர்கள் வந்தால் அவ்வளவுதான்.
இப்படி வீட்டை பாதுகாப்பது, நமக்கு உற்ற நண்பன் என நாய்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான செல்லப்பிரணியாகும்.
பாசம் வைத்து நமக்கு நன்றியுணர்வை காட்டி எஜமானர்களே கதி எனக்கிடக்கும் நாய்க்கு நிகர் நாய்தான்.
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போலவே வலம் வரும் நாய் மீது அதீத அக்கறையை நாமும் வெளிப்படுத்துவோம்.
இதற்கு எடுத்துக்காட்டாகத்தான் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ கடந்த சில தினங்களாக டிரெண்டிங் ஹிட் அடித்து வருகிறது.
யாரேனும் காப்பாற்ற மாட்டார்களா? யாரேனும் காப்பாற்ற மாட்டார்களா? பசுமையான புல்வெளி மற்றும் மரங்கள் நிறைந்த ஒரு இடத்தில் நாய் ஒன்றை மலைப்பாம்பு தனது உடலால் சுற்றி நெறித்துக் கொண்டு இருக்கிறது.
பாம்பின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவிக்கும் நாய், யாரேனும் காப்பாற்ற மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் பார்த்து கொண்டு இருக்கிறது.
இதைக்கவனித்த மூன்று சிறுவர்கள், தங்கள் நாய் ஆபத்தில் சிக்கியுள்ளதை கண்டு ஒரு நிமிடம் கலங்கி போகின்றனர்.
எனினும், நாயை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிறுவர்கள், ஒரு கம்பி ஒன்றைக் கொண்டு பாம்பை அடிக்க முற்படுகின்றனர்.
ஆனால், பாம்பு சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் சீறுகிறது. மெய்சிலிர்க்க வைத்துள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது எனினும், தலையை லாவகமாக கையில் ஒரு சிறுவன் இறுக்கமாக பிடித்துக்கொள்கிறான்.
மீதமுள்ள இரண்டு சிறுவர்களும் நாயை இறுக்கமாக சுற்றியுள்ள பாம்பின் பிடியை விடுவிக்க போராடுகின்றனர்.
துணிச்சலான போராட்டத்திற்கு பிறகு நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது. பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. 40 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.
ஏராளாமானோர் லைக்குகளையும் போட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், சிறுவர்களின் துணிச்சல் மெய்சிலிர்க்க வைப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
சிறுவர்களுக்கு பாராட்டு சிறுவர்களுக்கு பாராட்டு சிறுவர்களின் துணிச்சலான செயலுக்கு ஒரு சல்யூட் செய்யலாம் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில், இந்த வீடியோ இருப்பதாக பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், சிறுவர்கள் நாய் மீது கொண்ட பாசத்தையும், அவர்களின் தைரியத்தையும் வெளிக்காட்டுவதாக இந்த வீடியோ இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், உண்மையில் இந்த நாய் தனது வாழ்நாள் முழுவதும் இந்த சிறுவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
இவ்வாறாக பலரும் தங்கள் கருத்துக்களை வரிசையாய் பதிவிட்டு வருகின்றனர்.