சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, நீரில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல விஷயங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

“80 வருசத்துக்கு முன்னாடி..” நீரில் மூழ்கிய கப்பல்.. “உள்ள இருந்த ஹிட்லர் இறப்பை சொன்ன ‘கடைசி’ குறிப்பு??.. மிரண்ட ஆய்வாளர்கள்

 

அடால்ப் ஹிட்லரின் நாஜிப் படைகள் பயன்படுத்திய இந்த கப்பலானது, கடந்த 1945 ஆம் ஆண்டு நீரில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


கடந்த 1993 ஆம் ஆண்டு, UK பகுதியில் இந்த கப்பல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இத்தனை ஆண்டுகளாக இது மிகவும் பாதுகாக்கப்பட்டு, யாருக்கும் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

“U boat 534” எனப்படும் இந்த கப்பல், நாஜிப்படைகள் தென் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல பயன்படுத்திய ஒன்று என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

1945 ஆம் ஆண்டின் போது, அங்கிருந்து தப்பிச் செல்ல நாஜிப் படைகள் இந்த கப்பலை பயன்படுத்திய போது அது நீரில் மூழ்கி போனாதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், கடந்த 1993 ஆம் ஆண்டு இந்த கப்பலை கண்டெடுத்தனர். தொடர்ந்து, தற்போது ஆய்வாளர்கள் உள்ளே இறங்கி சோதனை செய்ய தொடங்கி உள்ளனர்.

அப்படி இருக்கையில் தான், ஏராளமான அரிய ஆவணங்கள் கப்பலுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாஜிப்படையில் பயன்படுத்திய கப்பலில் உள்ளிருந்து சிகரெட், “ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட மீதமிருந்த ஒரே ஒரு குறிப்பு”, தனிப்பட்ட கடிதங்கள், புகைப்படங்கள், எக்கச்சக்கமான பீர் பாட்டில்கள் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட பொருட்கள் அதற்குள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் தற்போதும் பயன்படும் வகையில் இருந்ததைக் கண்டு, மிரண்டு போயுள்ளனர்.

அதே போல, ரகசியமாக தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் enigma machine ஒன்று அதற்குள் இருந்ததையும் கண்டெடுத்துள்ளனர். மேலும், அதில் சில புகார் கடிதங்கள் இருந்ததையும் தற்போது மீட்டெடுத்துள்ளனர்.

U 534 படகில், காலத்துக்கு மேம்பட்ட சில சுவாரஸ்யமான தொழில்நுட்பங்கள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த சில ஆண்டுகளில், இது தொடர்பாக இன்னும் கூடுதலான சுவாரஸ்ய தகவல் வெளிவரும் என்றும் அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது 80 ஆண்டுகளுக்கு முன்புள்ள கலைப் பொருட்கள் பற்றியது மட்டும் இல்லை என்றும், அதன் பின்னணியில் உள்ள கதையை குறிப்பது என்றும் நாங்கள் அனைத்தையும் இணைத்து பல பொருட்களை கண்டுபிடிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply