காதலி உயிரிழந்த சோகத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

காதலியை அடக்கம் செய்த இடத்திலேயே தன்னையும் அடக்கம் செய்யுமாறு அந்தச் சிறுவன் உருக்கமாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

தமிழகத்தின் தென்காசி மாவட்டம், மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன்.

இவரது 16 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்னொரு சிறுமியைக் காதலித்தார்.

அந்தச் சிறுமி அண்மையில் உயிர் இழந்தார். அந்த சோகத்திலேயே இருந்த சிறுவன், தன் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோவில், “என் காதலி இறந்த சோகத்தில் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்.

என் காதலியை புதைத்த இடத்திலேயே என்னையும் புதைத்து விடுங்கள்” என உருக்கமாகப் பேசி உள்ளார்.

இதனிடையே சிறுவனின் பெற்றோர் அவனது தற்கொலையை மறைத்து அடக்கம் செய்ய முயன்றனர்.

இதுகுறித்து தேவகுளம் பொலிஸாருக்குப் புகார் சென்றது. அவர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலியின் மரணத்தால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply