தந்தையின் உருவ சிலையைத் தங்கை திருமணத்திற்கு பரிசளித்த அண்ணன்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹைதராபாத்தைச் சேர்ந்த அவுலா ஃபானி குமார் தனது தந்தையின் உருவ சிலையைத் தனது தங்கைக்கு திருமணம் பரிசாக அளித்திருக்கிறார். அவரது சிலையின் முன் ‘கன்னிகாதானம்’ நடத்தி தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
ஃபானி அமெரிக்காவில் டென்னசியில் வேலை செய்து வசித்து வருகிறார். 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் வசிக்கும் அவரது தந்தை சுப்ரமணியம் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ஃபானி இந்தியாவுக்கு வந்தபோது, அவரது தந்தை இறந்துவிட்டார். தங்கையின் திருமணத்தில் தந்தை இல்லாதது தெரியாமல் இருக்க அண்ணன் எடுத்த முயற்சியின் கதை இந்த காணொளியில்.