விவசாயிகளின் பல மாத ஆர்ப்பாட்டம் உணவுப்பொருள் பணவீக்கம் அதிகரிப்பை தொடர்ந்து இரசாயன உரங்கள் இறக்குமதி மற்றும் பயன்பாடு மீதான தடையை புதன்கிழமை இலங்கை முற்றாக நீக்கியுள்ளது.

இதன் மூலம் இயற்கை விவசாயத்தை முழுமையாக பின்பற்றும் நாடாக மாறும் தனது இலக்கிலிருந்து இலங்கை பின்வாங்கியுள்ளது.

கடந்த ஏப்பிரலில் தனது புதிய விவசாய கொள்கையை அறிவித்தவேளை இரசாயன உரங்களை அரசாங்கம் முற்றாக தடைசெய்திருந்தது.

எனினும் தற்போதைய தலைகீழ் மாற்றம் குறித்து தெளிவுபடுத்தியுள்ள விவசாய அமைச்சர் தனியார் துறையினர் மாத்திரம் இரசாயன உர இறக்குமதியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளாh.

இரசாயன உரங்களிற்கான மானியங்கள் மீண்டும் வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்;டிருந்தார்.

மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளிக்கும் நாடு என்பதால் – விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளதால் இரசாயன உர இறக்குமதியை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் தானாக முன்வந்து இரத்துசெய்கின்றது என அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து இரசாயன உரங்கள் களைக்கொல்லிகள் பூச்சிகொல்லிகள் பூஞ்சை கொல்லிகளின் தடை கடந்த வருடம் ஏப்பிரல் 26 ம்திகதி நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானவிவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதுடன் அரசாங்கம்இரசாயனஇயற்கை உர கலப்பு கொள்கையைபின்பற்றவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இரசாயன உர தடையும் மோசமான காலநிலையும் இணைந்து அறுவடை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்ததுடன் ஒக்டோபரில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 8.3 வீதமாகவும் உணவு பணவீக்கம் 11.7 வீதமாகவும் காணப்பட்டது.உணவுபணவீக்கம் 11.7 வீதமாக காணப்பட்டது.

மோசமான காலநிலை காரணமாக 13000 ஹெக்டயர் காய்கறிச்செய்கை பாதிக்கப்பட்டது அரசாங்கம் அதற்கு இழப்பீடு வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் 2 மில்லியன் விவசாயிகள் உள்ளனர் அதன் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ விவசாயத்தை நம்பியுள்ளனர்.

2019 இல் முக்கிய பயிர்ச்செய்கை காலத்தில் 3.5 பில்லியன் கிலோ விளைச்சல் காணப்பட்டது எனினும் இரசாயன உரை தடை காரணமாக நெல்விளைச்சல் இந்த வருடம் 43 வீதத்தினால் வீழ்;ச்சியடையலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இரசாயன உர தடை நீக்கப்பட்டாலும் நெல்விளைச்சல் 30வீதம் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைகழக விவசாய பொருளாதார நிபுணர் ஜீவிகவீரஹேவ தெரிவித்தார்.

இதுதேவையற்ற பரிசோதனை முயற்சி என தெரிவித்த அவர் இழந்த காலத்தை மீளப்பெறமுடியாது மேலும் உலக சந்தை யில் விலைகள் இரண்டுமடங்காக அதிகரித்துள்ளன, விநியோகஸ்தர்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply