முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த தாங்கி இன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.

காணியில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனரக இயந்திரத்தால் தோண்டி எடுக்கப்பட்ட தாங்கி

இரகசிய தகவலையடுத்து மீட்கப்பட்ட பாரிய தாங்கி! | Sri Lanka Ltte Tamil Diaspora Mullaitivu Police

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி, கிராமசேவையாளர், காவல்துறையினர், இராணுவத்தினர் முன்னிலையில் குறித்த பகுதி கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது பாரிய இருப்பு எரிபொருள் தாங்கி ஒன்று எரிபொருள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த தாங்கி 16.3 அடிநீளமும்,7.9அடி விட்டமும் கொண்டது.
காவல்நிலையத்தில் வைத்த பாதுகாக்க உத்தரவு

இரகசிய தகவலையடுத்து மீட்கப்பட்ட பாரிய தாங்கி! | Sri Lanka Ltte Tamil Diaspora Mullaitivu Police

எரிபொருள் தாங்கியை வெளியில் எடுத்து வெட்டப்பட்ட துவாரம் ஊடாக முகர்ந்து பார்த்தபோது மண்ணெண்ணைய் வாசனை காணப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட எரிபொருள் தாங்கியினை புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்குமாறும் இது தொடர்பிலான மேலதி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி பணித்துள்ளார்.

Share.
Leave A Reply