சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.

பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதத்தை அந்நாட்டு அரசு விதித்து உள்ளது.

சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.

பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஐபோனின் 12 மாடல் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்தது தொடர்பாக நடந்த விசாரணையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழுமையற்ற தயாரிப்பின் விற்பனை, நுகர்வோருக்கு எதிரான பாகுபாடு, மூன்றாம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டு கூறப்பட்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் விற்பனையில் இருந்து சார்ஜர்களை விலக்குவதற்கான முடிவு, சுற்றுச்சூழல் அர்பணிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply