தங்கக் கட்டில், 300 பட்டுச் சேலை, கோடிகளில் நகைகள்… அடடே, பரிசு மழையில் குளிக்கும் மகாலட்சுமி!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் குறித்த செய்திகள் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ரவீந்திரன் தனது மனைவிக்கு விலை உயர்ந்த பரிசுகள் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சீரியல் நடிகையாக உயர்ந்தவர் மகாலட்சுமி.

தொடர்ந்து சில சீரியல் முக்கிய கேரக்டரில் வில்லியாகவும் நடித்து வந்த இவர் தற்போது அன்பே வா சீரியலில் வாசுகி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஏற்கனவே அனில் என்பவருடன் திருமணமான மகாலட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வெறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த மகாலட்சுமி, பரத் நடிப்பில் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள முன்னறிவான் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இதனிடையே கடந்த செப்டம்பர் 1-ந் தேதி மகாலட்சுமிக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்திரன் சந்திரசேகருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

அன்று முதல் இவர்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில். தம்பதி இருவரும் மகாபலிபுரத்தில் தங்களது ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களாக மகாலட்சுமியுடன் தொடர்பில் இருந்த ரவீந்திரன், தனது புது மனைவிக்கு விலை உயர்ந்த பரிசுகளை குவித்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகி வருகிறது.

மகாலட்சுமி உறங்கும் கட்டிலில் 300 பட்டுப் புடவைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் தவிர தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரவீந்தர் தனது மனைவிக்காக எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து ஒரு சொகுசு வீட்டைக் கட்டியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த ஜோடி சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த செய்திகள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அவர்கள் விரைவில் உறுதிப்படுத்துவார்கள்.

ஏற்கனவே தங்களது திருமணம் தொடர்பான விமர்சனங்களுக்கு தம்பதி தங்களது பேட்டி மூலம் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply