பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் கடந்த 8 ஆம் திகதி காலமானார்.
இந்த நிலையில் அவரின் மறைவை இனந்தெரியாத நபர் ஒருவர் முன்கூட்டியே கணித்து தனது ட்விட்டர் பதிவில் அதனை குறிப்பிட்டுள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத் 2022 செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று இறக்கிறார் என்று கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி குறித்த நபர் டுவிட் செய்திருந்தார்.
Queen Elizabeth II will die on September 8th 2022
— ? (@aidemleoxide) February 4, 2022
;
மேலும் அவர் மே 25 ஆம் திகதி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2062 ஆண்டு மார்ச் 17 ஆம் திக அன்று பூமி முழுவதுமாக தீயில் மூழ்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவை பதிவு செய்தவர் யார் என்ற தகவல் தெரியவில்லை. எனினும் இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.