2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(13) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வீழ்த்தி, இலங்கை அணி இவ்வருடத்துக்கான ஆசியக் கிண்ணத்தை தனதாக்கியது.

8 வருடங்களின் பின்னர் இலங்கை அணி ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியினர் இன்று காலை விமானநிலையத்தை வந்தடைந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் வீதியின் இரு மருங்கிலும் இலங்கை அணி ரசிகர்கள் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

8 வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் இருபது 20 ஆசிய கிண்ணம், இருபது 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை சுவீகரித்த இலங்கை, இந்த வருடமும் அதேபோன்று இரட்டை வெற்றியை ஈட்ட அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் இலங்கை முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply