இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.

பிரபல பாடகர்கள் மனோ, ஸ்வேதா மேனன், எஸ்பிபி சரண் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்னில் 17, 18 ஆம் திகதிகளில் இளையராஜா தலைமையிலான குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

“ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மாஸ்ட்ரோ கலாநிதி இளையராஜாவையும் அவரின் குழுவினரையும் வரவேற்பதில் நாம் கௌரவமடைந்தோம்” என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply