ஜெசிகா தற்கொலைக்கான காரணம் குறித்தும் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.

சென்னையில் காதல் தோல்வியால் சினிமா துணை நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
துப்பறிவாளன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் பவுலின் ஜெசிகா. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், சென்னை நெற்குன்றத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று (செப்.17) அவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக கோயம்பேடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் ஜெசிகா தற்கொலைக்கான காரணம் குறித்தும் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நடிகை ஜெசிகா பவுலின்
1/

நடிகை ஜெசிகா பவுலின்

அந்தக் கடிதத்தில் ஜெசிகா குறிப்பிட்டுள்ள காதலன் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெசிகா தற்கொலைக்கு காதல் தோல்விதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
ஜெசிகா வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த காலங்களில் ஜெசிகா பல்வே டிக்டாக் மற்றும் ரீல்ஸ் உள்ளிட்டவைகளில் நடித்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் கண்ணீருடன் பகிர்ந்துவருகின்றனர்.

நடிகை ஜெசிகா பவுலின், வாய்தா படத்தில் தீபா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

Share.
Leave A Reply