வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞனின் சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.

வாகரைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இளைஞனின் உடல் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காயங்கேணி மத்தி, மாங்கேணி எனும் முகவரியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

Share.
Leave A Reply