p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இன்று (06) வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை வரை மூன்று நாள்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.