காரில் பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவன்மீது, போலீஸ்காரர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், காரில் பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞன்மீது, போலீஸ்காரர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், மெக்டொனால்டு கார் பார்க்கிங்கில் 17 வயதான எரிக் கான்டு(Erick Cantu) என்பவர் காரில் அமர்ந்துகொண்டு பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த சான் அன்டோனியோ நகர போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் பிரெனாண்ட்(James Brennand), கீழே இறங்குமாறு அவரிடம் கூறியிருக்கிறார்.

அதற்கு, அந்த நபர் ஏன் எனக் கேட்டபோது, போலீஸ்காரர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்திருக்கிறார்.

அதிர்ச்சியில் பயந்துபோன அந்த நபர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது தூரம் துரத்திச்சென்ற போலீஸ் அதிகாரி கார்மீது துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, இதில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்தத் தாக்குதலில் காயத்துடன் உயிர்பிழைத்த அந்த சிறுவன், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply