சனிக்கிழமை இரவு ஜெனிவா-செச்செரோன் (Genève-Sécheron) நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஏறி மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி எரிந்து18 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஏறிய அவரது நண்பரும் மின்கம்பியில் பட்டு பலத்த எரிகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
18 வயதான அவர் ஆரம்பத்தில் ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனைகளுக்கு (HUG) கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பெறுவதற்காக லொசானில் உள்ள CHUV மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார் என்று ஜெனிவா வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆலிவர் பிரான்சி திங்களன்று தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஜெனிவா-செச்செரோன் (Genève-Sécheron) நிலையத்தில் இச்சம்பவத்தை கண்டதாகக் கூறிய சாட்சியினால் பொலிசாருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.
அவசர சேவை மற்றும் எஸ்பிபி உடனடியாக சம்பவ இடத்த்துக்கு வந்து இரண்டு இளைஞர்களை ஒரு வேகன் கூரையிலில் இருந்து மீட்கப்பட்டனர்
இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று ஜெனிவா அரசு வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். விசாரணையின் முதல் கூறுகளின்படி, ரயிலில் ஏறிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்த சோக சம்பவம் பற்றி தீர்மானித்து முடிவேடுக்க நீதிமன்றங்களால் விசாரணை திறக்கப்பட்டுள்ளது