பெண் காவல்துறை அலுவலர் ஒருவரை பலவந்தமாக முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சிறார் மற்றும் மகளீர் பாதுகாப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
பணி நிமித்தமாக நாடாளுமன்ற காவல்துறை காரியாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது படிக்கட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் பொலிஸ் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டதாக குறித்த காவல்துறை சார்ஜன்ட் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு இந்த விடயம் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை என்பதன் காரணமாக அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவருக்கு முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையின் உயர்மட்டத் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.